நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வியில் சிறந்த தேர்ச்சியை பெறாத மாணவர்களுக்கு  தொழில் திறன் கல்வி புதிய நம்பிக்கையை தருகிறது: செனட்டர் சரஸ்வதி

சுபாங்:

கல்வியில் சிறந்த தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தொழில் திறன் கல்வி புதிய நம்பிக்கையை தருவதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

குறிப்பாக எஸ்பிஎம் தேர்வில் சிறந்த தேர்ச்சியை பெறாத மாணவர்களுக்கு தொழில் திறன் கல்வி (திவேட்) ஒரு வழித்தடமாக இருந்து வருகிறது.

டிடிசி கல்லூரியின் 13ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசினார். 

டிடிசி கல்லூரியில் பொறியியல், லொஜிஸ்டிக் மற்றும் ரிட்டெயில் மேனெஜ்மன்ட் ஆகிய துறைகளில் அதிகமான மாணவர்கள் தொழிற் திறன் கல்வியை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த மாணவர்கள் டிவெட் கல்வியை தொடர கல்வி கடனுதவிகளை வழங்கி வரும் பிடிபிகே மற்றும் பிடிபிடிஎன் அமைப்புகளை தாம் பாராட்டுவதாக அவர் சொன்னார்.

டிடிசி கல்லூரியின் நிர்வாகம் பல தொழில்துறை நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளதால், இந்த கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் 100% உறுதிப்படுத்தப்படுகிறது.

இந்த கல்லூரி சீனாவில் உள்ள தைஜாவ் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதால், இங்கு பயிலும் மாணவர்களுக்கு அனைத்துலக வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதே வேளையில் இந்த கல்லூரி 250 தொழில்துறை நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இதன் வழி இந்த கல்லூரியில் பயின்று பட்டம் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படுவதாக அவர் சொன்னார். 

ஆகையால் சிறந்த கல்வி தேர்ச்சியை பெறாத மாணவர்கள் இது போன்ற கல்லூரியில் சேர்ந்து தங்கள் எதிர்காலத்தை பிரகாசமாகி கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset