செய்திகள் விளையாட்டு
பிரான்ஸ் கால்பந்து வீரர் அந்தோனியோ கிரிஸ்மேன் ஓய்வு
பாரிஸ்:
பிரான்சின் அந்தோனியோ கிரிஸ்மேன், அனைத்துலக கால்பந்துப் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
பிரான்ஸ் கால்பந்து வீரர் அந்தோனியோ கிரிஸ்மேன். அவருக்கு வயது 33.
கடந்த 2014ல் நெதர்லாந்துக்கு எதிரான நட்பு கால்பந்து போட்டி மூலம் பிரான்ஸ் அணியில் அறிமுகமானார்.
இதுவரை 137 போட்டிகளில் பங்கேற்று, 44 கோல் அடித்துள்ளார்.
ஃபிஃபா உலகக் கிண்ணம் (2018), தேசிய லீக் (2020-21) கிண்ணங்களை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார்.
கடைசியாக, கடந்த செப். 9ஆம் தேதி லியானில் நடந்த பெல்ஜியம் அணிக்கு எதிரான தேசிய லீக் போட்டியில் பங்கேற்றார்.
வரும் 2026இல் நடக்கவுள்ள உலகக் கிண்ண போட்டி வரை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிரிஸ்மேன், அனைத்துலக போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதன்மூலம் இவரது 10 ஆண்டு கால அனைத்துலக கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.
உள்ளூர் போட்டியில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் இவர், ரியல் சோசிடாட், பார்சிலோனா அணிகள் சார்பிலும் பங்கேற்றுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 9, 2025, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
December 8, 2025, 12:47 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
December 8, 2025, 12:46 pm
48ஆவது கிண்ணத்தை வென்ற லியோனல் மெஸ்ஸி: உலகின் முதல் வீரராக சாதனை
December 7, 2025, 11:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 7, 2025, 11:40 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் தோல்வி
December 4, 2025, 12:15 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 4, 2025, 12:02 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 3, 2025, 9:26 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 3, 2025, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
December 2, 2025, 8:25 am
