நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளோபல் இக்வான் தொடர்பில் போலிசார் 80 விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளனர்: சைபுடின்

கோலாலம்பூர்:

குளோபல் இக்வான் தொடர்பில் போலிசார் 80 விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இதனை கூறினார்.

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள குளோபல் இக்வான் தொடர்பான விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குழந்தைகள் சட்டம் 2001, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017, புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007 (சட்டம் 670) தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை போலிசார் 80 விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளது.

விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset