நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3 ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்காப்பு வாதம் புரிய பூங் மொக்தார், அவரது மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர்:

மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்காப்பு வாதம் புரிய டத்தோஶ்ரீ பூங் மொக்தார், அவரது மனைவி டத்தின்ஶ்ரீ  ஷிசி இஷாதேவுக்கு நீதிமன்றம் உத்தரவு.

பொது மியூச்சுவல் பெர்ஹாட் அறக்கட்டளைப் பிரிவில் பெல்க்ராவின்   150 மில்லியன் ரிங்கிட் முதலீடு திட்டத்தில் 2.8 மில்லியன் ரிங்கிட் ஊழல் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளை அவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள அவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டத்தோ அஹ்மட் ஜைடி இப்ராஹிம் தலைமையிலான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் குழு, டத்தோ முகமது ஜைனி மஸ்லான், டத்தோ நூரின் பதருடின் ஆகியோருடன் அமர்ந்து அரசுத் தரப்பு மேல்முறையீட்டை அனுமதித்து ஏகமனதாக உத்தரவு பிறப்பித்தது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்தது.

2022 செப்டம்பர் 2ஆம் தேதியன்று செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பத்தை அனுமதித்த பின்னர் தம்பதியினரை விடுவித்தது.

குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ள பூங் மொக்தார், ஷிசி ஆகியோருக்கான செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு வழக்கை திருப்பி அனுப்ப குழு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset