நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிகேஆர் தேர்தல் முறை மாற்றம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை: ஃபஹ்மி ஃபாட்சில் 

புத்ரா ஜெயா: 

பிகேஆர் தேர்தல் முறை மாற்றம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று அக்கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார். 

முன்னதாக, 'ஒரு உறுப்பினர், ஒரு வாக்கு' என்ற முறையில் 
பிகேஆர் கட்சியின் தேர்தல் நடைபெறும் என்று வெளிவந்த தகவலையும் ஃபஹ்மி நிராகரித்தார். 

இந்த முன்மொழிவு ஒரு விவாதம் மட்டுமே என்றும் கட்சியின் தலைமையால் இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் ஃபஹ்மி குறிப்பிட்டார். 

இன்னும் இறுதி வார்த்தை எதுவும் இல்லை. 

பிகேஆர் அனைத்து மலேசியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான கட்சியில் உள்ள அசல் உணர்வை உறுதி செய்வதே எங்கள் விருப்பம்.

இன்று தகவல் தொடர்பு அமைச்சில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset