நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணைய முதலீட்டு மோசடியில் தொழிற்சாலை நிர்வாகி 900,000 ரிங்கிட்டை இழந்தார்: போலிஸ்

ஜொகூர்பாரு:

இணைய முதலீட்டு மோசடியில் தொழிற்சாலை நிர்வாகி ஒருவர்  943,250 ரிங்கிட்டை இழந்துள்ளார்.

ஜொகூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ எம். குமார் இதனை கூறினார்.

விருந்தோம்பல் துறையில் முதலீடு செய்யும் வாட்ஸ்அப் குழுவில் சம்பந்தப்பட்ட 53 வயதான பெண் சேர்க்கப்பட்டார்.

தெரியாத நபர்களால் குறுகிய காலத்தில் அதிக, எளிதான வருமானத்தை ஈட்ட முடியும் என உறுதியளிக்கப்பட்டது.

வாக்குறுதியளிக்கப்பட்ட லாபத்தால் ஈர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர் கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் வரை முதலீடு செய்ய 943,250 தொகையை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு இணைய பணப் பரிமாற்றம் செய்துள்ளார்.

பணம் செலுத்தப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவருக்கு அவரது முதலீட்டின் வாயிலாக 600,000 ரிங்கிட் லாபத்தைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் லாபத்தைத் திரும்பப் பெற அனுமதிக்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

இருப்பினும், பாதிக்கப்பட்டவர் கோரியபடி கூடுதல் தொகையை செலுத்த மறுத்துவிட்டார். 

பின் இது மோசடி என நம்பிய அவர் போலிசில் புகார் செய்தார்.

அவரின் புகாரின் அடிப்படையில் போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று டத்தோ குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset