நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொருளாதார மேம்பாட்டிற்கு உலக அமைதி அவசியமானது: டத்தோஶ்ரீ முஹம்மது இக்பால்

கோலாலம்பூர்:

பொருளாதார மேம்பாட்டிற்கு  உலக அமைதி மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

இஸ்லாமிய கல்வி அறவாரியத்தின் தலைவர் டத்தோஶ்ரீ முஹம்மது இக்பால் இதனை வலியுறுத்தினார்.

11ஆவது உலக தமிழர் பொருளாதார மாநாடு தலைநகரில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

இம்மாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்த விஆர்எஸ் சம்பந்த், தேசிய நில நிதி கூட்டுறவு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோ சகாதேவன் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.

இம் மாநாட்டில் உலக அமைதியும் பொருளாதாரமும் என்ற தலைப்பிலான கூட்டத்திற்கு தலைமையேற்றது மகிழ்ச்சி.

பேராசிரியர் டத்தோ டாக்டர் டெனிசன் ஜெயசூரியா, டி. சரவணன் ஆகியோர் இத்தலைப்பை ஒட்டி பேசினர்.

அவர்களின் பேச்சின் வாயிலாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு உலக அமைதி மிகவும் அவசியமானதாக உள்ளது.

ஆனால் இப்போது அமைதி எங்கு உள்ளது என்பதை தான் அனைவரும் தேடி வருகிறோம்.

குறிப்பாக வரும் காலங்களில் இந்த அமைதி சூழ்நிலை இன்னும் மோசமாகலாம் என கூறப்படுகிறது.

ஆக உலக வர்த்தகர்கள் சம்மாதிப்பதுடன் இந்த உலக அமைதிகாக நடவடிக்கைகளை சமூக கடப்பாடுடன் முன்னெடுக்க வேண்டும்.இது பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset