நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெலுக் இந்தானில் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றொரு பேரணியை நடத்தினர்

தெலுக் இந்தான்:

பேரா தெலுக் இந்தானில் பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றொரு பேரணியை நடத்தினர்.

கடந்த மாதம் சீனக் கொடியை ஏந்தி  பேரணியை நடத்தியதற்கு எதிர்வினையாக இப் பேரணி நடத்தப்பட்டது.

மக்கள் தேசபக்தி பேரணி என்று பெயரிடப்பட்ட இந்தப் பேரணி நேற்று மெனாரா சாண்டோங்கில் நடைபெற்றது.

இப் பேரணியில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று போலிசார் அறிவுறுத்தியிருந்தனர்.இருந்தாலும் இப் பேரணி நடத்தப்பட்டது.

தெலுக் இன்தான் பாஸ் இளைஞரணித் தலைவர் நூர்ஹஃபிசுல் பத்ருல் ஹிஷாம் பேரணியின் அமைப்பாளராக இருந்ததாக நம்பப்படுகிறது.

நூர்ஹஃபிசுல் நேற்று முகநூலில் பதிவிட்டுள்ள பதிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset