நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உலகளவில் 168 திருவள்ளுவர் சிலைகள்: செவாலியர் வி.ஜி.பி.க்கு தலைநகரில் பாராட்டு

கோலாலம்பூர்: 

உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரின் பெருமைதனை உலகளவில் பறைசாற்றும் முயற்சியாக இலங்கை, கனடா, அமெரிக்கா, நியூயார்க் போன்ற 140க்கும் மேற்பட்ட இடங்களில் 168 சிலைகளை நிறுவிய செவாலியர் டாக்டர் வி.ஜி. சந்தோசம், தலைநகர் கோலாலம்பூரில் கெளரவிக்கப்பட்டார்.

தமிழ் இலக்கியத்தின் முத்தாகத் திகழும் திருக்குறளை இயற்றிய மாமுனிவர் திருவள்ளுவரை தமது வாழ்நாள் வழிகாட்டியாக ஏற்று செயலாற்றி வருகின்றவர், தமிழ்நாடு வர்த்தகச் சக்கரவர்த்தி செவாலியர் டாக்டர் வி.ஜி.சந்தோசம்.

தமிழ் நாட்டில் புகழ்பெற்ற வி.ஜி.பி. எனும் தொழில் சாம்ராஜ்யத்தை கொண்டிருக்கும் இவர், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்று, அதன் வழி உலகளவில் இதுவரை 168 திருவள்ளுவர் சிலைகளை நிறுவி அசாத்திய சாதனை நிகழ்த்தியுள்ளார். 

மலேசிய மண்ணில் மட்டும் 4 திருவள்ளுவர் சிலைகளை நிறுவியுள்ள இவர், தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். 

இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த (ஜ.செ.க) பெர்கேசோ வாரிய இயக்குநர் தி.கண்னன், நேற்று முன்தினம் மதியம் மஸ்ஜிட் இந்தியா மெட்ரோ ஸ்டார் விடுதியில் டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்தம் குழுவினருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி, மலர்மாலை அணிவித்து கெளரவப்படுத்தினார்.

டாக்டர் வி.ஜி. சந்தோசத்துடன் வருகை புரிந்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க) தமிழ்நாடு  துணை பொதுச் செயலாளரும் மல்லை தமிழ்ச் சங்கத்தின் நிறுவனத் தலைவருமான மல்லை சத்தியாவுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

வி.ஜி. சந்தோசத்தின் தனிப்பட்ட உழைப்பும் உயர்வும் தம்மை பிரமிக்கச் செய்வதாகவும், அவரிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் இருப்பதாக தி.கண்ணன் பாராட்டினார். 

இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்றிருந்த கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் (ஜ.செ.க) பிரகாஷ், வி.ஜி.பி.யின் மனித நேயம் கண்டு மனம் நெகிழ்வதாகக் குறிப்பிட்டு பேசினார்; மலேசிய இந்தியர்கள் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டார். 

நிகழ்ச்சியில் தமிழக ஜோதிடர் பண்டிதர் பச்சை ராஜென், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகப் பிரிவு தலைவர் பெ.இராஜேந்திரன்,
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பா.கு.சண்முகம், டெலிஸ்டார் நிறுவனர் எஸ்.பி.மணிவாசகம், மலேசிய முத்தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் கருணாநிதி, எழுத்தாளர் ஐ.எஸ்.சத்தியசீலன், ரவுப் மாவட்ட மன்ற உறுப்பினர் ஜி.நவிந்தராஜ் உட்பட சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset