நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீட்டு தளவாட பொருட்களை விற்கும் நபர் கொலை: ஐந்து சந்தேக நபர்கள் கைது 

மூவார்: 

கடந்த செவ்வாய்கிழமை வீட்டு தளவாட பொருட்களை விற்கும் நபர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த தகவலைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர் 

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் அந்நிய நாட்டவர்களாவர். அவர்களில் இரு பெண்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் மூன்று மியன்மார் நாட்டு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர் என்று மூவார் மாவட்ட காவல்துறை தலைவர் துணை ஆணையர் ரய்ஸ் முக்லிஸ் கூறினார். 

ஜொகூர் மாநில போலிஸ் தலைமையகத்துடன் இணைந்து மூவார் மாவட்ட காவல்துறை தரப்பு இணைந்து நேற்றிரவு அவர்களைக் கைது செய்தனர். 

கைகலப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஒருவர் உயிரிழந்தார் என்று போலிஸ் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது 

இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302, 324இன் கீழ் விசாரணை செய்யப்படுவதாக அவர் சொன்னார். அனைத்து சந்தேக நபர்களும் ஏழு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset