நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும்: இந்தியா

நியூயார்க்: 

சட்டவிரோதமாக ஆக்கிரமித்த இந்திய பகுதியைவிட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.பொதுச் சபையின் 79வது கூட்டத்தில் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

மேலும், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத கொள்கைகள் ஒருபோதும் வெற்றியடையாது. எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பாகிஸ்தானின் தற்போதைய சூழலுக்கும் அவர்களின் கடந்த கால செயல்பாடுகளை காரணம். அவர்கள் உலக நாடுகள் மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல என்றார்.

முன்னதாக, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஐ.நா.வில் பேசியிருந்தார். அதற்கு பதில் தரும் விதமாக ஜெய்சங்கர் இவ்வாறு பேசினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset