நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.

அல் அவால் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் வஃதா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அல் வஃதா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணியின் வெற்றி கோல்களை ஏஞ்சலோ கேப்ரியல், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் அல் லித்திஹாட் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் அல் கலீஜ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் கட்ஷியா அனியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அல் அஹ்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset