நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்துப் போட்டியில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.

பலோய்டோஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் கெல்தா விகோ அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் கெல்தா விகோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அட்லாட்டிகோ மாட்ரிட் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 90ஆவது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரேஸ் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் வில்லாரியல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பான்யோல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ரியால் பெதிஸ் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் லாஸ் பால்பாஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset