நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

97-ஆவது ஆஸ்கர் விருது விழா: அதிகாரப்பூர்வத் தேர்வு பட்டியலில் இந்தியாவின் Laapataa Ladies திரைப்படம் இடம்பெற்றுள்ளது

டெல்லி: 

97-ஆவது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வத் தேர்வு பட்டியலில் இந்தியாவின் Laapataa Ladies திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

இதனை இந்தியத் திரைப்படச் சம்மேளனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இத்திரைப்படம் 2001-ஆம் ஆண்டில் திருமணமான இரண்டு தம்பதிகள் ஒரே ரயிலில் பயணிக்கும்போது தவறுதலாக மணப்பெண் மாற்றம் நடந்துவிடுகிறது. 

இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக பாலின சமத்துவத்துடன் கூறியள்ள இந்த படத்தை ஆணாதிக்க மனநிலையில் இருந்து வெளியில் வரவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாலின சமத்துவத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைக்கப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்ற லாப்பட்டா லேடீஸ் திரைப்படம் 97-ஆவது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வத் தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

இந்நிலையில், 97-ஆவது ஆஸ்கர் விருது விழாவின் அதிகாரப்பூர்வத் தேர்வு பட்டியலில் இந்தியாவிலிருந்து 6 தமிழ்த் திரைப்படங்கள், 3 தெலுங்குத் திரைப்படங்கள், 4 மலையாளத் திரைப்படங்கள், 1 ஒடியாத் திரைப்படம், 12 ஹிந்தி திரைப்படங்கள், 3 மராட்டித் திரைப்படங்கள் என மொத்தம் 29 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

மகாராஜா, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான், ஜமா ஆகிய 6 தமிழ்த் திரைப்படங்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset