நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

DMY ஏற்பாட்டில் பிரம்மாண்டமாக நடந்தேறிய GV Prakash - A Celebration of Life - Live in KL இசை நிகழ்ச்சி: இசை மழையில் நனைந்த மலேசிய ரசிகர்கள்

கோலாலம்பூர்:

பிரம்மாண்டத்தின் அடையாளம் DMY ஏற்பாட்டில் தமிழ்ச் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷின் GV PRAKASH - A CELEBRATION OF LIFE இசை நிகழ்ச்சி நேற்று புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி அரங்கில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த இசை நிகழ்ச்சியில் 13,000 க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டனர். 

மறக்க முடியாத இன்னிசை இரவு கொண்டாட்டமாக GV பிரகாஷ் தலைமையில் இசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இசைப் பிரம்மாண்டம், தீவிரமான நிகழ்ச்சி திட்டமிடல், மற்றும் ரசிகர்களின் உற்சாகம் இந்நிகழ்வை இன்னும் சிறப்பாக மாற்றியது.

GV பிரகாஷ் அவரது பிரபலமான பாடல்களையும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த புதிய இசைப் பகுதியையும் நிகழ்ச்சியில் கொண்டு வந்து அனைவரையும் மெய்மறக்கச் செய்தார். இசை மேடை, ஒளியோட்டம், மற்றும் ஒலிபெருக்கி அமைப்புகள் எல்லாம் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

DMY ஏற்பாட்டாளர்களின் துல்லியமான ஏற்பாடுகள் பாராட்டுக்குரியவை. இதனால், இசை ரசிகர்கள் அனைவரும் இதை மறக்க முடியாத தருணமாக கொண்டாடினர்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களுடன் பாடகர்கள் சைந்தவி, அந்தோனி தாசன், நித்யஶ்ரீ, திப்பு, அருளினி, யோகி பி, ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் ஆகியோர் ரசிகர்களுக்கு இசை விருந்தினை வழங்கினர். 

அனைத்து பாடல்களும் நேரடியாக இசை குழுவினர்கள் வாசித்தனர். குறிப்பாக, UNPLUGGED MODE இல் சில பாடல்களை பாடகர்கள் பாடி ரசிகர்களைக் கவர்ந்தனர். 

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் முதலாவது வெளிநாட்டு இசை நிகழ்ச்சி இதுவாகும். 

காதல் மெலோடிகளில் இருந்து குத்தாட்ட பாடல்கள் மற்றும் பிரேக்அப் அன்தம்கள் வரை, ஒவ்வொரு ஜானரிலும் உயிரோட்டம் அளித்து GV பிரகாஷ் தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபித்தார். நிகழ்ச்சி முழுவதும் அவரது இசையின் அசாத்திய வேகம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

உயர்தர கலை நிகழ்வுகள், கண்கவர் நிகழ்ச்சி ஒளி வடிவமைப்பு மற்றும் இசையின் ஓசையுடன் மேடையே உயிர்பெற்றது. ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆடிப்பாடி GV பிரகாஷ் மீது தங்களுடைய அன்பை வெளிப்படுத்தினர். 

இசை ரசிகர்களுக்கு ஓர் மறக்க முடியாத இரவாக அமைந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset