நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

GISBH நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கை: அப்பாவி உறுப்பினர்களைப் பாதிக்கக்கூடாது: பாஸ் வலியுறுத்தல் 

கோலாலம்பூர்: 

GISBH நிறுவனத்திற்கு எதிராக காவல்துறையினரின் விசாரணை நடவடிக்கையை பாஸ் கட்சி வரவேற்கிறது.

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதை காவல்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும். 

குற்றம் செய்தவர்களை மட்டுமே தண்டிக்க வேண்டுமே தவிர அப்பாவி உறுப்பினர்கள் அல்ல என்று பாஸ் கட்சியின் தலைமை செயலாளர் டத்தோ தக்கியுடின் ஹசான் கூறினார் 

இந்த நிறுவனம் பல வணிக, சமூக நல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தாற்காப்பது நமது தார்மீக கடமையாகும் என்று அவர் தெரிவித்தார். 

அதுமட்டுமல்லாமல் GISBH நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கையைக் கவனமுடன் கையாள வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார். 

முன்னதாக, GISBH நிறுவனத்திற்குச் சொந்தமான 20 சமூக நல இல்லங்கள்  யாவும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் 402 பேரும் மீட்கப்பட்டனர்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset