நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய குத்தகையாளர்களிடையே மின்-விலைப்பட்டியல் குறித்த விழிப்புணர்வு அவசியம்: ஆனந்தன்

கோலாலம்பூர்:

நாட்டில் உள்ள இந்திய குத்தகையாளர்களிடையே மின்-விலைப்பட்டியல் (E Invoice) குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

மலேசிய இந்திய குத்தகையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆனந்தன் இதனை கூறினார்.

குத்தகையாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில் தொடர்ச்சியாக நிகழ்வுகளை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டி வருகிறது.

அதன் அடிப்படையில் தேசிய வருமான வரி வாரியத்தின் மின்-விலைப்பட்டியல் குறித்தும் டீசல் உதவித் தொகை குறித்தும் இன்று விளக்கங்கள் வழங்கப்பட்டது.

இதில் மின்-விலைப்பட்டியல் குறித்து புகழேஸ்வரன் உரிய விளக்கங்களை வழங்கினார்.

அவர் கொடுத்த விளக்கங்கள் பங்கேற்றவர்களுக்கு பெரும் பயனாக இருந்தது.

குறிப்பாக பலருக்கு இன்று தான் மின்-விலைப்பட்டியல் குறித்து தெரிந்து கொண்டனர்.

ஆக இந்த மின்-விலைப்பட்டியல் குறித்த விழிப்புணர்வு இந்திய குத்தகையாளர்களிடையே அவசியம் தேவைப்படுகிறது.

காரணம் மின்-விலைப்பட்டியல்களை முறையாக சமர்பிக்கவில்லை என்றால் 200 ரிங்கிட் முதல் 20,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

ஆகவே இவ்விவகாரத்தில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஆனந்தன் கேட்டுக் கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset