நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

2026ஆம் ஆண்டு முதல் பறக்கும் டாக்ஸி சேவை: துபாயில் அறிமுகமாகிறது 

அபுதாபி: 

2026ஆம் ஆண்டு துபாயில் பறக்கும் டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. துபாய் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு இயக்குநர் காலித் அல்-அவாடி கூறினார். 

2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த பறக்கும் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். தற்போது வாகனங்களைச் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார். 

எங்களின் திட்டத்திற்கு அமெரிக்காவின் JOBY AVIATION நிறுவனமும் பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனமும் ஆதரவு வழங்கி வருகின்றனர். 

பறக்கும் டாக்ஸிகளின் தர மதிப்பீடு, பகுப்பாய்வு நடவடிக்கைக்குப் பின் பறக்கும் டாக்ஸிகளை நிர்வகிக்க ஏர்போர்ட்ஸ் 2026ஆம் ஆண்டு திறக்கப்படும் என்று சொன்னார். 

2035ஆம் ஆண்டுக்குள் துபாயில் உள்ள அனைத்து டாக்ஸிகளும் மின்சார வடிவில் இருக்கும் என்றும் 2050ஆம் ஆண்டுக்குள் அனைத்து பேருந்து போக்குவரத்துகளும் மின்சார இலக்கு போக்குவரத்தாக உருமாற்றம் காணும் என்று அல்-அவாடி கோடிக்காட்டினார்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset