நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பேஜரை தொடர்ந்து வாக்கிடாக்கிகளை வெடிக்க வைத்து மக்களை சாகடிக்கும் இஸ்ரேல் 

லெபனான்: 

லெபனானில் ‘பேஜா்’ தொலைத்தொடா்பு சாதனங்களை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானவா்கள் காயமடைந்து, 12 போ் உயிரிழந்த மறுநாளே, வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி சக்தி சேமிப்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் 20 போ் உயிரிழந்தனா்; 300-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலும், பிற பகுதிகளிலும் வாக்கி டாக்கிகளும் சோலார் கருவிகளும் வெடித்துச் சிதறியுள்ளன. 

பேஜர்கள் வெடிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற கருவிகள் வெடிப்பில் 450 பேர் காயமடைந்ததாகவும், 20 பேர் கொல்லப்பட்டதாகவும் லெபனான் சுகாதாரத்துறைத் தெரிவித்திருக்கிறது. 

Pagers, Then Walkie Talkies: How Devices Were Weaponised Against Hezbollah

லெபனான் - இஸ்ரேல் மோதல் எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்கும் அபாயம் இருக்கிறது. கருவிகள் வெடித்ததில் ஹிஸ்புல்லா போராளிகள் மட்டுமல்லாமல் லெபனான் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

புதன்கிழமை இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோஅவ் கேலட், "நாங்கள் போரில் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம் - அதற்கு தைரியம், உறுதிப்பாடு, விடாமுயற்சி தேவை." எனப் பேசியிருக்கிறார். ஆனால் பேஜர் வெடிப்புக் குறித்து மூச்சு விடவில்லை.

நவீன சாதனங்கள் வந்தபிறகும் ஹிஸ்புல்லாஹ் போராளிகள் பேஜர்களையே பயன்படுத்துகிறார்கள். இதனைக் குறிவைத்து இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் ஒரே நேரத்தில் கருவிகளை வெடிக்க வைக்கும் தாக்குதலில் ஈடுபட்டது. 

இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற கொடூர செயல்களைக் கண்டு உலக நாடுகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன. 

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset