நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பால்டிமோர் பால விபத்து - US$100 மில்லியன் இழப்பீடு கேட்டு அமெரிக்க நீதித்துறை வழக்கு தொடுத்துள்ளது

வாஷிங்டன்: 

அமெரிக்காவின் பால்டிமோர் (Baltimore) பாலத்தைச் சேதப்படுத்திய கப்பல் நிறுவனம் 100 மில்லியன் டாலருக்கு மேல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை வழக்கு தொடுத்துள்ளது.

கடந்த மார்ச் 26-ஆம் தேதி சிங்கப்பூரருக்குச் சொந்தமான M V Dali சரக்குக் கப்பல் பால்ட்டிமோர் பாலத்தில் மோதியது.

சாலைப் பணியாளர்கள் 6 பேர் மாண்டனர். கப்பல் போக்குவரத்து தடைபட்டது.

அமெரிக்காவின் Maryland வட்டார நீதிமன்றத்தில் Grace Ocean, Synergy Marine ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தைச் சிதைத்தவர்களைப் பொறுப்பேற்கச் செய்வதில் நீதித்துறை உறுதியாய் இருப்பதாகத் தலைமை சட்ட அதிகாரி மெரிக் கார்லன்ட் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset