நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கொட்டி தீர்க்கும் கனமழை: மத்திய ஐரோப்பிய நாடுகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன

புடாபெஸ்ட்:

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால், ஆஸ்திரியா, போலந்து, செக் குடியரசு, ருமேனியா உள்ளிட்ட மத்திய ஐரோப்பிய நாடுகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. 

ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ள நிலையில், இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பா முழுவதும் பரவலாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப் பெருக்கு இது எனக் கூறப்படுகிறது. 

ருமேனியா, செக் குடியரசு, போலந்து மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதோடு அந்நாட்டு அதிகாரிகள் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட தொடங்கியுள்ளனர். பல இடங்களில் பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

ஆஸ்திரியாவிலிருந்து ருமேனியா வரை ஏற்பட்ட வெள்ளத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். செக் எல்லையில் உள்ள போலந்து நகரமான க்ளோட்ஸ்கோவின் மேயர் மைக்கல் பிஸ்கோ, “அங்கு நீரின் அளவு குறைந்துவிட்டது. இருப்பினும் எங்களுக்கு உதவி தேவைப்படுகிறது. 

வார இறுதி வரை குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது நகரின் பாதிக்கும் மேல் மின்சாரம் இல்லை” என்றார்.

ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஆர்பன் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், தீவிர வானிலை மற்றும் ஹங்கேரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக தனது அனைத்து சர்வதேச பணிகளையும் ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

செக் குடியரசில் அதிக மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி வழங்குவதற்காக ஆயுதப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மர் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset