நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வெடிப்பதற்கு முன் டைட்டான் கப்பல் தந்த கடைசிச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது

வாஷிங்டன்:

டைட்டானிக் சிதைவுகளைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறுவதற்கு முன்பு அதிலிருந்து அனுப்பப்பட்ட கடைசி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் டைட்டன் கப்பல் வெடித்ததில் அதில் இருந்த 5 பேரும் மாண்டனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணையை அமெரிக்கக் கடற்படை தொடங்கியுள்ளது.

விசாரணை இரு வாரங்களுக்குத் தொடரும்.

சம்பவத்தில் என்ன தவறு நேர்ந்தது, வடிவமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமா ஆகியவை இந்த விசாரணையில் ஆராயப்படும்.

பயணம் தொடங்கி ஒரு மணி நேரத்தில் டைட்டன் கப்பலிலிருந்து "இங்கு எல்லாம் நலமே" என்ற செய்தி அனுப்பப்பட்டது.

சுமார் 3.3 கிலோமீட்டர் ஆழத்தில் இரண்டு எடைகளை அகற்றிவிட்டதாக டைட்டன் செய்தி அனுப்பியது.

அதன் பின்னர் டைட்டன் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

டைட்டானிக் கப்பலிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் டைட்டன் கப்பலின் சிதைவு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset