நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரின் ஆகக் கடைசி Times புத்தகக் கடை மூடப்படுகிறது 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரின் Times புத்தகக் கடை இனி இருக்காது. அதன் வரலாறு ஒரு முடிவுக்கு வருகிறது.

கடைசிக் கடையை மூடவிருப்பதாக Times இன்று (16 செப்டம்பர்) அறிவித்தது.

ஆங்கிலப் புத்தகங்களை விற்கும் Times புத்தகக் கடையில் எல்லாவிதமான புத்தகங்களையும் காணலாம்.

சிங்கப்பூரில் 1978ஆம் ஆண்டுமுதல் Times புத்தகக் கடை செயல்பட்டு வந்தது.

ஒரு காலத்தில் அது கொடி கட்டிப் பறந்தது. புத்தகங்கள் நிரம்பி வழிந்தன. புத்தகப் பிரியர்கள் கூட்டங் கூட்டமாக அதை நாடிச் சென்றனர்.

காலம் மாறியது. ஒவ்வொன்றாக Times கடைகள் மூடப்பட்டன.

ஹாலந்து ரோட்டில் உள்ள Jelita கடைத்தொகுதியில் இப்போது அதன் கடைசிக் கடை உள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை (22 செப்டம்பர்) வரை அது செயல்படும்.

அது குறித்து Times புத்தகக் கடை அதன் சமூக ஊடகப் பக்கங்களில் பிரியாவிடை எழுதியது.

கடந்த ஐந்தாண்டில் அது படிப்படியாக மூடத் தொடங்கியது.

Centrepoint கடை 2019ல் மூடப்பட்டது.

அதன் பிறகு 2021ல் Marina Square, Paragon கடைத்தொகுதிகளில் இருந்த கடைகள் மூடப்பட்டன.

இவ்வாண்டு Plaza Singapura, Waterway Point ஆகியவற்றில் இருந்த கடைகள் அவற்றின் கதைகளை மூடின.

வாசகர்களுக்கு நன்றி சொன்னது Times.

எண்ணற்ற கதைகளின் கடைசி அத்தியாயம் வந்துவிட்டதாக அது அறிவித்தது.
 
ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset