நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காவல்துறை உதவியாளருக்கு லஞ்சம்: இரு மியன்மார் நாட்டவர்கள் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைப்பு 

ஜார்ஜ்டவுன்: 

பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த அரசாங்க அமைப்பில் உள்ள காவல்துறை உதவியாளருக்கு லஞ்சம் வழங்கிய குற்றத்திற்காக இரு மியன்மார் நாட்டு ஆடவர்களும் ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டனர். 

மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி நட்ராதுன் நயிம் முஹம்மத் சைடி குற்றஞ்சாட்டப்பட்ட 53 மற்றும் 31 வயதுக்குட்பட்ட ஆடவர்களுக்கு எதிராக இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

முறையான உரிமம் இல்லாத துணை குத்தகையாளர்களான இருவரும் தங்களுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களைக் கண்டுக்கொள்ளாமல் இருக்க சந்தேக நபர் இருவரும் காவல்துறை உதவியாளருக்கு 500 ரிங்கிட் லஞ்சம் வழங்கினர். 

சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் முறையான வேலை உரிமம், வேலை பெர்மிட் ஆகியவை கொண்டிருக்கவில்லை. மேலும், மலேசிய கட்டுமான தொழிற்துறை வாரியத்தின் போலி அட்டையை வைத்துள்ளது தெரிய வந்தது .

முன்னதாக, நேற்று மதியம் 3 மணிக்கு அவர்கள் பினாங்கு மாநில எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர். 2009ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி சட்டத்தின் செக்‌ஷன் 17(பி) யின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset