நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது: வெளியுறவு அமைச்சு 

புத்ராஜெயா:

லெபனானில் தகவல் தொடர்பு சாதனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது.

வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

கடந்த செப்டம்பர் 17 முதல் லெபனான் முழுவதும் தகவல் தொடர்பு சாதனங்களை வெடிபொருட்களாகப் பயன்படுத்துவது குறித்து மலேசியா மிகவும் கவலை கொண்டுள்ளது.

இதில் குறைந்தது 21 பேர் மரணமடைந்தனர். கிட்டத்தட்ட 3,300 பேர் காயமடைந்துள்ளனர்.

லெபனானின் பாதுகாப்பு, நிலைத்தன்மை இறையாண்மையைப் பாதிக்கும் என்பதால், 

சைபர் தொடர்பான இந்தத் தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது.

மலேசியா இந்த நெருக்கடியில் லெபனானுடன் உறுதியாக நிற்கிறது.

வளர்ந்து வரும் பதற்றத்தைத் தணிக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்படும்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள், அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கும், லெபனான் அரசாங்கம், மக்களுக்கும் மலேசியா தனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிப்பதான வெளியுறவு அமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset