நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குளுவாங்கில் ஏற்பட்ட சாலை விபத்து:  4 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம் 

குளுவாங்: 

இன்று காலை கம்பொங் காஜாவில் உள்ள பத்து 8ஆவது சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். 

அதிகாலை 4.59 மணிக்கு நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் SUV ரக கார் ஒன்று எட்டு பேரை ஏற்றி வந்த மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது. 

31 வயது மதிக்கத்தக்க கார் ஓட்டுநர் கடுமையான காயங்களுக்கு இலக்கான வேளையில் மற்றொரு பெண் பயணி தலையில் பலத்த காயங்களுக்கு இலக்கானார். 

இந்நிலையில் SUV யில் பயணம் செய்த 41 வயது ஆடவர், அவரின் மனைவி, குழந்தைகள் யாவரும் லேசான காயங்களுக்கு இலக்காகினர். இருப்பினும் 65 வயது மதிக்கத்தக்க இரு பயணிகளுக்கு கை முட்டி உடைப்பட்டது 

இந்த தகவலை தீயணைப்பு, மீட்புப்படையின் நடவடிக்கை பிரிவு கோமாண்டர் நுஸுல் அஸ்ரோய் முஹம்மத் யூசோஃப் கூறினார். 

பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் யாவும் காலை 6.22 மணிக்கு நிறைவு பெற்றது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset