நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

2025 ஆசியான் கூட்டத்தை ஏற்று நடத்தும் மலேசியா: தயார்நிலை முழுவீச்சில் நடைபெற வேண்டும் 

கோலாலம்பூர்: 

2025 ஆசியான் கூட்டத்தை மலேசியா உபசரணை நாடாக ஏற்று நடத்துகிறது. இந்நிலையில் ஆசியான் கூட்டத்தை முன்னிட்டு ஒவ்வொரு அமைச்சு அதன் தயார்நிலையை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

ஆசியான் கூட்டமைப்பு மற்றும் அதனை உட்படுத்திய பல்வேறான நிகழ்ச்சிகளை மேற்கொள்ள மலேசியா தயாராகி கொண்டிருக்கிறது. 

இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளது. மலேசியாவை ஆசியான் வட்டாரத்தில் தலைசிறந்த நாடாக உருமாற்றம் அடைய இது வழிகுக்கும் என்று அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார் 

முன்னதாக, ஆசியாந் மலேசியா தேசிய நிலையிலான தயார் நிலை சிறப்பு செயற்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டு இவ்வாறு கூறினார். 

மலேசியா இதற்கு முன் 1977,1997, 2005 மற்றும் 2015ஆகிய ஆண்டுகளில் ஆசியான் கூட்டத்தில் ஏற்று நடத்தியுள்ளது.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset