நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எல்ஆர்டி இலகு இரயில்  தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்தவருக்கு 250 ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர்:

இலகு ரயில் போக்குவரத்து (எல்ஆர்டி) பாதை பகுதியில் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒரு உலோக சேகரிப்பாளரான  43 வயது வோங் ஹான் சுவானுக்கு நீதிமன்றம் இன்று 250 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது.

அந்த அபராதத்தை வோங் ஹான் செலுத்தத் தவறினால், மூன்று வாரங்களுக்கு சிறையில் அடைக்கவும்  உத்தரவிட்டார் நீதிபதி ஐனா அசஹ்ரா அரிஃபின். 

நேற்று பிற்பகல் 3.35 மணிக்கு இங்குள்ள வாங்ஸா மஜுவில் உள்ள சான் சோ லின் இலகு ரயில் எல்ஆர்டி நிலையத்தில் அந்த நபர்  அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 

இந்தக் குற்றத்திற்கு ரயில்வே சட்டம் 1991 இன் பிரிவு 62 இன் கீழ் 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.

இருப்பினும், வோங் தரப்பில் வாதாடிய தேசிய சட்ட உதவி அறக்கட்டளையை சேர்ந்த வழக்கறிஞர் சிம்ரெட் சிங், வோங் இன்னும் தனிமையில் இருக்கிறார். நிலையான வருமானம் இல்லை. 

தொடர்ந்து மறுசுழற்சிக்காக உலோகத்தை மட்டுமே சேகரிக்கிறார் என்ற அடிப்படையில் குறைந்தபட்ச அபராதத்தை விதிக்க நீதிமன்றத்தில் கோரினார்.

- நந்தினி ரவி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset