நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஒரு ரிங்கிட்டிற்கு விற்பனையாகும் கறிவேப்பிலை கிலோ 15 முதல் 18ரிங்கிட் வரை விற்கப்படுகிறது; சுயமாகவே கறிவேப்பிலையை வளர்த்துக்கொள்ளுங்கள்: பி.ப.சங்கம் அறிவுரை

பினாங்கு:

கறிவேப்பிலை கிலோவுக்கு 15 ரிங்கிட் முதல் 18 ரிங்கிட் வரை விற்கப்படுவதால் பல இல்லத்தரசிகள் மிகுந்த ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்பு  ஒரு கிலோ 10.00 ரிங்கிட்டிற்க்கு விற்கப்பட்டது என அதன் கல்விப்பிரிவு அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.

சில வியாபாரிகள் 100 கிராம் 1.00 ரிங்கிட்டிற்கு விற்கின்றனர்.
அவை ஒரு கட்டு என்ற அடிப்படையில் விற்கப்படுகின்றன.

சில நேரங்களில் இந்த கறிவேப்பிலை கிட்டத்தட்ட இலவசமாகவே தரப்பட்டது. ஆனால் இப்பொழுது இல்லை.

 ஆனால் இப்போது ஒரு கிலோ மவெ 15 முதல் மவெ18 வரை விற்கப்படுவதாக சுப்பாராவ் கூறினார்.

“அடுத்த முறை நீங்கள் உணவகத்திற்குச் செல்லும்போது, ​​​​கறி அல்லது பிற இந்திய உணவுப் பொருட்களில் கறிவேப்பிலையை எதிர்பார்க்க முடியாது. அப்படியே இருந்தாலும் அவற்றை எண்ணிவிடலாம் என்றார் அவர்

சமீபத்தில் பி.ப.சங்கம் நடத்திய ஆய்வில், மவெ 2 முதல் மவெ 3 வரை  சிறிய கட்டு அளவு கறிவேப்பிலைகள் கட்டப்பட்டு விற்கப்படுகிறது.

நாமே கறிவேப்பிலை யை வளர்த்துக் கொண்டால் அதன் அடக்க விலை 1 ரிங்கிட்  மட்டுமே செலவாகும் என்றார் சுப்பாராவ்.

தேங்காய் பால், தேங்காய் விற்பனை செய்யும் தேங்காய் விற்பனையாளர்கள் கூட, பயனீட்டாளர்களுக்கு தேங்காய்களை வாங்கும் போது இனி கறிவேப்பிலையை இலவசமாக வழங்குவதில்லை.

தங்கத்தை விட விலை அதிகமாகிவிட்டது என்கிறார்கள் இல்லத்தரசிகள்.

பயனீட்டாளர்கள் குறிப்பாக இல்லத்தரசிகள், தங்கள் இல்லங்களில் சிறிய அளவிலாவது கறிவேப்பிலையை  சொந்தமாக வளர்க்குமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்துகிறது.

மேலும் இது எளிதில் பயிரிடக்கூடிய ஒரு செடியாகும் என்றார் சுப்பாராவ். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset