நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெடுஞ்சாலையில் காரை வழிமறித்த யானைகள்: பீதியடைந்த குடும்பம் 

கிரிக்:

கிழக்கு - மேற்கு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த காரை யானைக் கூட்டம் வழிமறித்தது.

நேற்று முந்தினம் தமது குடும்பம் சென்று கொண்டிருந்த காரை யானைகள் வழிமறித்ததாக 30 வயது  நோர் இஸ்ஸா தெரிவித்தார்.

கார் கிரிக் புலாவ் பண்டிங் பகுதியருகே சென்று கொண்டிருந்தபோது சம்பவம் நிகழ்ந்தது.

திடீரென்று அருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து வந்த யானைக் கூட்டம் சாலையின் குறுக்கே நின்றது. பதறிப்போன அந்தக் குடும்பம் காரை உடனடியாக நிறுத்தியது.

யானைகள் தங்களை நோக்கி வருதைக் கண்டு அவை காரை கவிழ்த்துவிடுமோ என்று அஞ்சியதாக நோர் இஸ்ஸா கூறினார்.

யானைகள் காரின் இரு பக்கங்களையும் தும்பிக்கையால் உரசியதால் கார் குலுங்கியதாக அவர் சொன்னார்.

நல்லவேளையாகச் சம்பவத்தில் யாருக்கும் காயம் நேரவில்லை என்றும் காரின் முன்பகுதியில் மட்டும் சிறிது சேதம் ஏற்பட்டதாகவும் நோர் இஸ்ஸா தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset