நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனப்புத்தாண்டை முன்னிட்டு 2 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுள்ளது: KTMB நிறுவனம் தகவல் 

கோலாலம்பூர்: 

சீனப்புத்தாண்டை முன்னிட்டு 2 லட்சத்து 10 ஆயிரம் டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டு விட்டதாக KTMB நிறுவனம் தெரிவித்தது 

இதுவரை 2 லட்சத்து 70 ஆயிரம் டிக்கெட்டுகளில் 2 லட்சத்து 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. 

மேலும், கூடுதல் ரயில் சேவையையும் KTMB நிறுவனம் தயார்ப்படுத்தி உள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார் 

சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கான டிக்கெட்டுகள் யாவும் விற்று தீர்ந்து விட்டன. குறிப்பாக கோலாலம்பூர்- ஈப்போ, கோலாலம்பூர்- பட்டர்வெர்த் ஆகிய நகரங்களுக்கு இடையிலான டிக்கெட் விற்பனைகள் முடிந்து விட்டன. 

மேலும், MRO திட்டத்தின் மூலமாக மலேசிய போக்குவரத்து அமைச்சு புதிதாக மின்சார இலகு ரக ரயில் ஒன்றைப் பெற்றுள்ளதாக இந்த மின்சார இலகு ரக ரயில் சீன புத்தாண்டை முன்னிட்டு செயல்பாட்டுக்கு வரும் என்று லோக் சொன்னார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset