நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

70% ஹலால் சான்றிதழ்களை கொண்டுள்ள நிறுவனங்கள் பூமிபுத்ரா அல்லாதவர்களால் நடத்தப்படுகின்றன

கோலாலம்பூர்:

நாட்டில் ஹலால் சான்றிதழ் வைத்திருப்பவர்களில் 70% க்கும் அதிகமானோர் பூமிபுத்ரா அல்லாத நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஹலால் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் கைரூல் அஸ்வான் ஹருண் இதனை கூறினார்.

மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை ஜாக்கிம் நிர்ணயித்த தரநிலைகளை நிறுவனங்கள் செய்த விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அதனால் இந்த விஷயத்தை ஒரு பிரச்சனையாகப் பார்க்கக்கூடாது.

பாரம்பரியமாக, பூமிபுத்ரா அல்லாத நிறுவனங்கள் உணவு உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இது ஒரு பிரச்சினையல்ல. ஏனெனில் அவை ஜாக்கிம் நிர்ணயித்த தரநிலைகளுக்கு இணங்குகின்றன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset