செய்திகள் மலேசியா
திடீரென பார்வை இழந்த சிறுவனைப்போல் இன்னொரு சிறுவன் ஆகக்கூடாது; பிள்ளைகளின் உணவுப் பழக்கத்தை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
நீலாய்:
பிள்ளைகளின் உணவுப் பழக்கத்தை பெற்றோர்கள் முழுமையாகக் கண்காணிக்க வேண்டும்.
பெர்சத்து சயாப் பிரிவின் சிரம்பான் தொகுதி தலைவர் டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.
8 வயது சிறுவன் ஒருவன் திடீரென பார்வை இழந்த செய்தியை அண்மையில் படித்தேன்.
வகுப்பறையில் இருந்தபோது தனக்குப் பார்வை இல்லை என்று அச் சிறுவன் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோரைத் தொடர்பு கொண்ட பின்னர், அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
கடுமையான வைட்டமின் ஏ குறைபாட்டின் விளைவாக, குழந்தை இரு கண்களிலும் பார்வை இழப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது.
ஒரு உணவியல் நிபுணரால் பரிசோதிக்கப்பட்ட பிறகு, அந்தக் சிறுவன் குழந்தையாக இருந்ததிலிருந்து எட்டு வயது வரை பதப்படுத்தப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிட்டது கண்டறியப்பட்டது.
வளரும் குழந்தைகளின் வளர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்வதற்காக அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உணவு சத்தான உணவு என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தைகளின் உணவுப் பழக்கத்தை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். எதையும் எளிதானதைத் தேர்ந்தெடுக்காதீர்கள். ஆனால் ஆரோக்கியமானதைத் தேர்ந்தெடுப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
எது எளிதானதோ அதை நாம் தேர்ந்தெடுத்தால், இறுதி முடிவு நிச்சயமாக நமக்கு கடினமாக இருக்கும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 20, 2025, 10:58 pm
மலேசியா, ஐரோப்பிய ஒன்றியம் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குகின: பிரதமர் இலாகா
January 20, 2025, 10:21 pm
70% ஹலால் சான்றிதழ்களை கொண்டுள்ள நிறுவனங்கள் பூமிபுத்ரா அல்லாதவர்களால் நடத்தப்படுகின்றன
January 20, 2025, 8:38 pm
நெடுஞ்சாலையில் காரை வழிமறித்த யானைகள்: பீதியடைந்த குடும்பம்
January 20, 2025, 7:41 pm
தீயால் வீட்டை இழந்த இந்திய குடும்பத்திற்கு துணையமைச்சர் குலசேகரன் நிதியுதவி
January 20, 2025, 5:16 pm
சீனப்புத்தாண்டை முன்னிட்டு 2 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுள்ளது: KTMB நிறுவனம் தகவல்
January 20, 2025, 5:01 pm
எல்ஆர்டி இலகு இரயில் தண்டவாளங்களில் அத்துமீறி நுழைந்தவருக்கு 250 ரிங்கிட் அபராதம்
January 20, 2025, 4:58 pm