நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீயால் வீட்டை இழந்த இந்திய குடும்பத்திற்கு துணையமைச்சர் குலசேகரன் நிதியுதவி

ஈப்போ: 

ஈப்போ பாராட் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கம்போங் தாவாஸ் குடியிருப்பு பகுதியில் முரளியின் வீடு முற்றாக தீயில் அழிந்து விட்டது என்று இந்த வீட்டிற்கு நேரடியாக வருகையளித்து பார்வையுட்டபோது மலேசிய சட்டத்துறை துணையமைச்சரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் கூறினார்.

விபத்தால் இந்த வீடு முற்றாக தீயில் அழிந்து விட்டது. வீட்டில் தங்கியிருந்நதவர்களின் உடமைகள் எதுவும் காப்பாற்ற முடியாமல் போயிற்று. வீட்டின் உரிமையாளர் முரளி ஜோசப், அவரது அண்ணன் மகன் ரவிந்திரன் சிவலிங்கம் ஆகியோரின் உடைகள், சமையல் பொருட்கள், ஆவணங்கள் அனைத்தும் முற்றாக தீயில் அழிந்து விட்டதாக போலீஸ் புகார் செய்ததோடு தம்மிடம் புகார் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவர்களுக்கு உடனடியாக துணிமணிகள், சாப்பிடுவதற்கு முதல்கட்டமாக 1000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு  கிந்தா மாவட்ட ஆட்சியாளர் வாயிலாக உதவிகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது இவர்கள் இருவரும் தமது மலாய்கார நண்பரின் வீட்டில் தற்காலிகமாக தங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்களின் முக்கிய ஆவணங்கள் அழிந்து விட்டதால் அதனை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களையும் தீயால் அழிந்து போன அவர்களது வீட்டையும் துணையமைச்சர் எம்.குலாவும் அவரது சிறப்பு அதிகாரி மு.இந்திரனும் நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தனர்.  அவர்களுக்கு அடிப்படை  தேவைகளுக்கான உதவிகள் இப்போது  செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து உதவி செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

- ஆர் பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset