நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா, ஐரோப்பிய ஒன்றியம் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குகின: பிரதமர் இலாகா

பெலாரஸ்:

மலேசியா, ஐரோப்பிய ஒன்றியம் சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

பிரதமர் இலாகா ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் மலேசியா - ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.

இது இரு தரப்பினருக்கும் இடையிலான உறவுக்கு ஒரு வரலாற்று தருணத்தைக் குறிக்கிறது.

2025 ஜனவரி 19-20 தேதிகளில் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸுக்கு நிதியமைச்சராகவும் இருக்கும் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் பணிசார் பயணத்துடன் இணைந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

உலகின் மிகப்பெரிய வர்த்தகக் குழுக்களில் ஒன்றான மலேசியாவின் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கை ஒரு முக்கியமான சாதனையாகும்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருக்கமான உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சாதனை, இரு தரப்பினருக்கும் இடையிலான தொடர்ச்சியான உறவின் வலிமையையும், பொருளாதார செழிப்பை வளர்ப்பதற்கான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset