நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

4 மாத குழந்தை மரணமடைந்த குழந்தை பராமரிப்பு மையம் உடனடியாக மூட உத்தரவு: அன்ஃபால் சாரி

ஷாஆலம்:

நான்கு மாத குழந்தை மரணமடைந்த குழந்தை பராமரிப்பு மையம் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது.

சிலாங்கூர் மகளிர் மேம்பாடு, சமூக நலக் குழுத் தலைவர் அன்ஃபால் சாரி இதனை கூறினார்.

கடந்த மாத தொடக்கத்தில் நான்கு மாத ஆண் குழந்தையின் மரணத்தில் தொடர்புடையதாக நம்பப்படும்,

கோலா லங்காட் பண்டார் சௌஜானா புத்ராவில் உள்ள குழந்தை பராமரிப்பு மையம் மூடப்பட்டுள்ளது.

சமூக நலத்துறை மற்ற குழந்தைகளின் பெற்றோர்களையும் தங்கள் குழந்தைகளை வேறு மையத்திற்கு  அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

விசாரணை ஆவணங்கள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், விரைவில் வழக்குத் தொடரப்படும் என்றும் அறியப்படுகிறது. 

அவை பதிவு செய்யப்படாததாலும், குழந்தைகள் சட்டம் சம்பந்தப்பட்ட வழக்கு இருப்பதாலும்  அம்மையம் மூடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset