நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச்- கோகோ காப் பின்னடைவு

வாஷிங்டன்:

அமெரிக்கப் பொது டென்னிஸ் முடிந்ததும் நேற்று புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இப்பட்டியலில் ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் சின்னெர் முதலிடத்தைத் தற்காத்துக் கொண்டார். 

2-ஆவது இடத்திலிருந்த ஒலிம்பிக் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் நுழைந்த ஜோகோவிச் அமெரிக்கப் பொது டென்னிஸ் தொடரின் னாவது சுற்றுடன் வெளியேறியதால் தரவரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். 

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் இரு இடம் முன்னேறி 2-ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 3-ஆஆவது இடத்தில் நீடிக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதல் இரு இடங்களில் போலந்தின் ஸ்வியாடெக், பெலாருஸின் சபலென்கா தொடருகிறார்கள்.

அதே சமயம் நடப்பு சாம்பியனாக கால்பதித்த அமெரிக்காவின் கோகோ காஃப் தரவரிசையில் பின்னடைவை சந்தித்து இருக்கிறார்.

அவர் தரவரிசையில் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset