நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது

சிட்னி: 

சமூக ஊடக தளங்களைச் சிறுவர்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்தை இவ்வாண்டு அறிமுகப்படுத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது என்று ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

தனது அரசாங்கம் வரவிருக்கும் மாதங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களின் வயது வரம்பைச் சோதனை செய்யும் என்றார் அவர்.

சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை விடுத்து கால்பந்து, நீச்சல், டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளில் தங்களை ஈடுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். 

சமூக ஊடகங்களுக்குச் சமூகத் தீங்குகளை விளைவிக்கின்றன. 

14-16 வயதுக்குட்டபட்ட சிறுவர்கள் அதிக அளவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். 

குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் சைபர் கொடுமைப்படுத்துதலின் விளைவுகள் மற்றும் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் சமூக ஊடகங்களில் உள்ளடக்கத்தை எளிதில் வெளிப்படுத்துவது பற்றி அல்பானீஸ் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset