
செய்திகள் இந்தியா
வந்தே பாரத் ரயில், தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் நின்றது
வாராணாசி:
வாராணாசி நோக்கி சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயில், தொழில்நுட்ப கோளாறால் எட்டாவா அருகே நடுவழியில் நின்றது.
தலைநகர் புதுதில்லியில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் வந்தே பாரத் ரயில் அதே நாளில் மதியம் 2.05 மணிக்கு வாராணாசியை சென்றடைகிறது.
இந்த நிலையில் இந்த ரயில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திங்கள்கிழமை காலை எட்டாவா அருகே நின்றது.
வந்தே பாரத் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்ந்து சிக்கலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு மணிநேரத்துக்கு மேலாக போராடியும் அவர்களால் கோளாறை சரி செய்ய முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வந்தே பாரத் ரயிலில் இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும் அப் பகுதியில் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்தது சரக்கு ரயில் எஞ்சினை பொருத்தி, வந்தே பாரத் ரயில் மீண்டும் பர்தானா ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 15, 2025, 11:30 am
வட மாநிலங்களில் ஹோலி – ரமலான் ஜூம்ஆ தொழுகை அமைதியாக நடந்து முடிந்தது
March 15, 2025, 10:42 am
ஹோலி பண்டிகையில் கஞ்சா ஐஸ்கிரீம் விற்பனை
March 14, 2025, 1:50 pm
டெல்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது
March 11, 2025, 10:01 am
கேரளாவில் யூடியூப் காணொலி பார்த்து டயட் செய்த இளம் பெண் உயிரிழப்பு
March 11, 2025, 9:56 am
சமஸ்கிருதம்தான் தமிழைவிட பழைமையானது: பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே
March 10, 2025, 1:23 pm