நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

4 ஆண்டுகள் பதவிக் காலத்தில் அமெரிக்க அதிபர் பைடன் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார்

வாஷிங்டன்:

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது 4 ஆண்டு பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார் என்று குடியரசுக் கட்சியின் RNC ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

532 நாட்கள் என்பது பைடனின் பதிவிக்காலத்தில் 40% ஆகும்.

ஒரு சராசரி அமெரிக்க அரசு ஊழியர் 48 வருடத்திற்கு எடுக்கக்கூடிய விடுமுறையை பைடன் 4 ஆண்டுகளில் எடுத்துள்ளார் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஒரு அரசு ஊழியர் வருடத்திற்கு 10 முதல் 14 நாட்கள் மட்டும் தான் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பைடனுக்கு எதிராக குடியரசுக் கட்சியினர் இதேபோன்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அதற்கு வெள்ளை மாளிகை விடுமுறையின் போதும் பைடன் தனது ஜனாதிபதி கடமைகளில் தீவிரமாக ஈடுபடுவதாகக் கூறியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset