நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

திடல் தடப்போட்டியில் புதிய சாதனை படைத்த இரு இந்திய மாணவிகள்

ஈப்போ:

ஈப்போவில் நடைபெற்ற  64ஆவது மாவட்ட நிலையிலான  பள்ளிகளுக்கான திடல் தடப்போட்டியில்  மாநில சாதனையை முறியடித்த 12, 15 வயதுடைய இரு இந்திய மாணவிகள் மாநில நிலையிலான வீரங்கனைகளுக்கான  விருதை வென்றனர்.

இப்போட்டியில் ஈப்போ பெண்கள் ஆரம்ப பள்ளியில்  ஆறாம்  வகுப்பு  12 வயது மாணவியான ஜனீதா விஜயராஜன் நான்கு தங்கப் பதக்கங்களைப் பெற்ற சாதனையை முறியடித்துள்ளார்

அவர் பங்கேற்ற 100 மீட்டர் ஓட்டத்தை 13.84 வினாடிகளில் முடித்து புதிய சாதனை படைத்ததுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

200 மீட்டர் ஓட்டத்தை 28.48 வினாடிகளிலும் 4x 100 மீட்டர் ஓட்டத்தை 54.88 வினாடிகளிலும்  4x200 மீட்டர் ஓட்டத்தை 2.00.34 வினாடிகளிலும் முடித்து புதிய சாதனையை புரிந்தார்.

இப்போட்டியில் தெலுக் இந்தான் ஸ்ரீ காந்தி  இடை நிலைப்பள்ளியைச் சேர்ந்த  15 வயதுடைய மகாலட்சுமி  லட்சுமணன் மூன்று தங்க பதக்கத்தை வென்றார்.

இவர் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனையை புரிந்துள்ளார்.

1,500 மீட்டர் ஓட்டம், 2,000 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். 

4x400 மீட்டர் ஓட்டப் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இதனிடையே இம்பெரியல் அனைத்துலக பள்ளியைச் சேர்ந்த 12 வயது மாணவி டானியா சரளநாதன் 4 x100 மீட்டர், 4 x 200 மீட்டர் ஆகிய இரு ஓட்டப் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நாட்கள் இங்குள்ள மாநில விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப் போட்டியில் 12 மாவட்டங்களிலிருந்து பள்ளிகள் இடம் பெற்றன.

இப்போட்டியை மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர்  கைருடின் அபு ஹனிபா விளையாட்டுப் போட்டியை நிறைவு செய்து வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset