நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மூன்று மில்லியன் இந்திய முட்டைகள் இலங்கையில் இறக்குமதி

கொழும்பு:

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட  3 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொள்முதல் பணிகள் நிறைவடைந்து, முட்டை இறக்குமதிக்கான விண்ணப்பங்கள், கால்நடை உற்பத்தி, சுகாதாரத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளாக அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் முட்டையை 40 ரூபாவிற்கு வழங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் முட்டை தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த இறக்குமதியால் தட்டுப்பாடு ஓரளவு தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- நிஹார் தய்யூப் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset