நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விஜயலட்சுமியை மீட்க போராடிய மலேசிய அரசுக்கு நன்றி: குடும்பத்தினர்

கோலாலம்பூர்:

விஜயலட்சுமியை மீட்க போராடிய 
மலேசிய அரசுக்கு அவரின் குடும்பத்தினர்  நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

கோலாலம்பூர் மாநகர் மன்றத் தலைவர் மைமுனா முகமது ஷரிஃப் இதனை உறுதிப்படுத்தினார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வில் விஜயலட்சுமி புதையுண்டார்.

அவரை மீட்கும் பணி 9 நாட்களுக்கு பின் கைவிடப்பட்டது.

இந்நிலையில் புதையுண்ட விஜயலட்சுமியின் குடும்பத்தார் மலேசிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அவரைத் தேடி மீட்கும் பணிகளில் அதிகாரிகள் அயராமல் உழைத்ததற்கு அவர்கள் நன்றி கூறினர்.

இம்மாதம் முதல் தேதி விஜயலட்சுமியின் கணவர் மாதவனும் மகன் சூரியாவும் இந்தியாவிற்குக் கிளம்பினர்.

அப்போது அவர்கள் கோலாலம்பூர் நகரமன்றத்திடம் நன்றி கூறியதாகக் அவர் குறிப்பிட்டார்.

மலேசிய அரசாங்கம் விஜயலட்சுமியைத் தேட எடுத்த அனைத்து முயற்சிகளும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்குத் திருப்தியளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset