நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தங்க ரத ஊர்வலத்துடன் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது

கோலாலம்பூர்:

தங்க ரத ஊர்வலத்துடன் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது.

மலேசியாவில் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இதில் தலைநகரில் உள்ள கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் இந்த விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும்.

அவ்வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று தங்க ரத ஊர்வலம் சிறப்பான முறையில் தொடங்கியது.

ஆலயத்தில் நடந்த சிறப்பு பூஜைகளுக்கு பின் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா கொடியேற்றி சிறப்பித்தார்.

அதன் பின் விநாயகப் பெருமான் தங்க ரதத்தில் அமர்ந்து தலைநகரில் உள்ள வீதிகளில் வலம் வந்தார்.

இந்த தங்க ரத ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

அதே வேளையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நாளையும் அதிகமான பக்தர்கள் இங்கு திரள உள்ளனர்.

அவர்களின் வசதிக்காக ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் உரிய வசதிகளை ஏற்பாடு செய்து தந்துள்ளது என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset