நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோபியோ ஏற்பாட்டில் இந்திய வம்சாவளியினர் தின விழா செப். 14 முதல் 16ஆம் தேதி வரை பிரிக்பீல்ட்ஸில் நடைபெறவுள்ளது

கோலாலம்பூர்:

கோபியோ ஏற்பாட்டில் இந்திய வம்சாவளியினர் தின விழாவை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகள் துரிதமாக மேற்கோள்ளப்பட்டு வருகிறது.

கோபியோ மலேசியாவின் பொது விவகார பிரிவு அதிகாரி பிரவின் பாலசுப்பிரமணியம் இதனை கூறினார்.

கோபியோ எனப்டும் மலேசிய இந்திய வம்சாவளிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த விழா வரும் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமம், பள்ளிகளில் நடைபெறவுள்ளது.

நாட்டில் உள்ள பல மொழி, கலை, பாரம்பரிய சங்கங்களின் ஆதரவுடன் இவ்விழா நடைபெறவுள்ளது.

தமிழ், மலையாளி, தெலுங்கு, பஞ்சாபி, பெங்காலி, குஜராத்தி, ஒரிசா, சிந்தி, கன்னடம், மராத்தி, மலாக்கா செட்டி என அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து தான் இவ்விழா நடைபெறவுள்ளது.

இசை, ஆடல் நிகழ்வு, வரலாற்று பாரம்பரிய கண்காட்சிகள், மாநாடுகள், சித்தா மாநாடு, யோகா பாரம்பரிய தற்காப்பு கலை காட்சிகள், பாரம்பரிய போட்டிகள், ரங்கோலி, பாரம்பரிய ஆடை அலங்கார நிகழ்வுகள், பாரம்பரிய உணவு கண்காட்சி, இணையம் வாயிலாக புகைப்படம், குறும்படம், சேலை போட்டிகளும் இந்த விழாவில் இடம் பெறவுள்ளது.

ஒவ்வொரு நாளும் காலை 10  மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவுள்ளது. 

மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, மொரிசியஸ், இலங்கை என 15க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பேராளர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இவ்வாண்டு விழாவின் முக்கிய அங்கமாக 15ஆவது கோபியோ அனைத்துலக மாநாடும் ஒரு சேர நடத்தப்படவுள்ளது.

இம்மாநாடு செப்டம்பர் 13, 14ஆம் தேதிகளில் செராஸ் அனைத்துலக இளையோர் மையத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் இந்திய வம்சாவளி சிஇஓ மாநாடு பெட்டாலிங்ஜெயா பிரிக்பீல்ட்ஸ் ஆசிய கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இப்படி பல சிறப்பு அம்சங்கள் கொண்ட இவ்விழாவில் மலேசிய இந்தியர்கள் திரளாக கலந்து பயன் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset