நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மரண தண்டனைக்கு வகை செய்யும் தந்தை, தாய், மகன் மீதான குற்றச்சாட்டு செப்டம்பர் 11ஆம் தேதி தீர்ப்பு

ஈப்போ:

போதைப் பொருள் வைத்திருந்ததாக மரண தண்டனை வகை செய்யும் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய தந்தை, தாய், மகன் மீதான வழக்கின் தீர்ப்பு இம் மாதம் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்ந நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிம்மோரில் உள்ள வீடொன்றில் போதைப் பொருள் வைத்திருந்ததாக இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் மரண் தண்டனை வகை செய்யும் குற்றச்சாட்டை  தாய், தந்தை, மகன் ஆகிய மூவர் மீது சுமத்தப்பட்டது.

இவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கான இரு தரப்பு வாதங்களை செவிமடுத்த நீதிபதி மோசஸ் சூசையன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை இம்மாதம் 11ஆம் தேதி விதிப்பதாக அறிவித்தார்

இந்த வழக்கில்  கே.ஏகாம்பரம் செட்டியார் (வயது 57), அவரது மனைவி முத்துபால் லத்தா ( வயது 55 ),  மகன் ஏ. லோகேஸ்வரன் (வயது 28 ) ஆகிய மூவருக்கு எதிராக குற்றவியல பிரிவு 39 பி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது்

இவர்கள் கடந்த 18-2-20இல் காலை மணி 4.30 மணியளவில் ஜாலான் மங்கிஸ் சிம்மோர்  எனும் முகவரியில்  உள்ள வீட்டில் 303.4 கிராம் எடையுள்ள மெத்தம்பெத்தமின் எனும் போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கினர்.

இது தொடர்பாக நடைபெற்ற வழக்கிற்கான இரு தரப்பு வாதத் தொகுப்பு நிறைவு பெற்றது.  

அதன் தீர்ப்பிற்கான தேதியை இம்மாதம் 11ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில்  டி.பி.பி.யாக ஆர். புஷ்பராசி, குற்றம் சாட்டபட்டவர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் சிரன்சிங். மோகன், பரிஹா அர்ஷாட் ஆகியோர் ஆஜராயினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset