நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தஞ்சோங் ரம்புத்தான் வட பகுதி ஸ்ரீ முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம்: 35 அடி உயரத்திலான வேல் அனைவரையும் கவர்ந்துள்ளது

ஈப்போ:

பேரா  தஞ்சோங் ரம்புத்தான் வட பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வரும் செப்டம்பர் 16ஆம் தேதி திங்கட்கிழமை  காலை மணி 9.15 க்கு ஆலயத்தின் சிறப்புடன் நடைபெறவுள்ளது.

சுமார்  70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின மூன்றாவது மகா கும்பாபிஷேகம் என்று அதன் தலைவர் எஸ். ராஜேந்திரன் கூறினார்.

ஒரு காலத்தில் ரப்பர் தோட்டமாக இருந்த  இந்த இடத்தில் இந்த ஆலயம் எழுப்பப்பட்டு இருந்தது. 

பின்னர்  கடந்த 1988 ஆம் ஆண்டு மேம்பாடு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அந்த தோட்டத்தில் இருந்த இந்த ஆலயத்திற்கு   மாற்று இடமாக தற்போதுள்ள இந்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது .

சிறியதாக இருந்த இந்த ஆலயமாக படிபடியாக சீரமைக்கப்பட்டு தற்போது பெரிய ஆலயமாக உருமாறி இந்த சுற்றுவட்டாரத்தில பிரசித்திப் பெற்ற ஆலயமாக விளங்கி வருகிறது.

இந்த ஆலயத்தில் தைப்பூச விழா பிரதான விழாவாகவும்  மற்றும் சிவராத்திரி விழா உடபட பல விஷேசமாக பூஜைகளும் நடைபெற்ற வருகிறது.

சுமார்  3 லட்சம் வெள்ளி செலவில் சீரமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆலய வளரச்சிக்கு பொது மக்களும்  அரசாங்கமும் ஆதரவு  வழங்கி வருகிறார்கள்.

இந்த ஆலயத்தை சுற்றிலும் ஆறுபடை முருகன் ஆலயங்கள் அமைக்கப்பட்ட ஒவியங்கள ஆலயங்களில வடிவமைக்கபட்ட சிலைகள் உயிரோட்டமிக்கதாக அமைந்து உள்ளது.

இந்த ஆலயத்தில் கோபுரத்தில் 35 ஆடி உயரத்தில் அமைக்கப்பட்ட வேல் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது்

இவ்விழாவிற்கு மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன், உலுகிந்தா சட்டமன்ற உறுப்பினர் முஹம்மத் அராஃபாட், தம்புன் நாடாளுமன்ற தொகுதிக்கான சிறப்பு அதிகாரி ஆர். சுரேஷ்குமார் ஆகியோரும் வருகை புரிய உள்ளனர்.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில் பொது மக்கள் அனைவரும் வருகை தந்து ஸ்ரீ முருகனை சந்தித்து திருவருட் பிரசாதம் பெற்றுய்ய வேண்டுமாய் ஆலயத் தலைவர் எஸ். ராஜேந்திரன் கேட்டுக்கொள்கிறார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset