நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா ரஷ்யாவிற்கு எதிராக மேற்கு நாடுகளுடன் இணைந்து செயல்படவில்லை: பிரதமர் அன்வார்

விளாடிவோஸ்டோக்: 

மலேசியா அனைத்து நாடுகளுடன் நல்லுறவைப் பேணி வருவதால்,மேற்கு நாடுகளுடன் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராகச் செயல்படவில்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். 

ரஷ்யாவிற்கு தனது இரண்டு நாள் பணி பயணத்தை நேற்று முடித்த அன்வார், மலேசியா பிரச்சனையை மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை என்றார் அவர்.

மலேசியா ரஷ்யாவிற்கு எதிராக மேற்கு நாடுகளுடன் இணைந்து செயல்படுவதால் யாரும் நன்மை அளிக்காது என்றும் பிரதமர் தெளிவுப்படுத்தினார்.

மேலும், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடனான ஒத்துழைப்பைப் போல் ரஷ்யாவுடனும் மலேசியா தனது ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்பதை பிரதமர் அன்வார் உறுதிப்படுத்தினார். 

கிழக்குப் பொருளாதார மன்றத்தில் நேற்று பேசிய அன்வார், மற்ற நாடுகளைத் தாக்கும் இராணுவக் கட்டமைப்பை மலேசியா ஆதரிக்காது என்றார் அவர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset