நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விளாடிவோஸ்டாக்கில் நடைபெறவுள்ள கிழக்கு பொருளாதாரப் பேரவையில் ரஷ்ய அதிபர் - பிரதமர் அன்வார் சந்திப்பு 

கோலாலம்பூர்: 

கிழக்குப் பொருளாதாரப் பேரவையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து  ரஷ்யாவின் ரோஸ்காங்கிரஸ் அறக்கட்டளை இன்று அறிவித்துள்ளது. 

அன்வார் இப்ராஹிம் ரஷ்ய அதிபர் புதின் இடையிலான சந்திப்பில் பொருளாதார ஒத்துழைப்புக் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

2024-ஆம் ஆண்டுக்கான கிழக்கு பொருளாதாரப் பேரவை செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை விளாடிவோஸ்டாக்கிலுள்ள கிழக்கு கூட்டாட்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset