நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டும்: துணையமைச்சர் சரஸ்வதி

கோலாலம்பூர்:

நம் நாடு தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்றால் பலமிக்க நாடாக உருவாக வேண்டும்.

அதற்கு இனங்களுக்கிடையிலான ஏற்றத் தாழ்வு கண்டிப்பாக களையப்பட வேண்டும் என ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார். 

மலேசியா விடுதலை பெற்றதில், பல இன மக்கள் ஒருங்கிணைந்து பெரிய பங்காற்றியுள்ளனர். 

பல்வேறு இன மக்களின் ஒற்றுமை, ஒருமித்த செயல்பாடுகள் மலேசியா உருவாக்கத்திற்கும் மேம்பாட்டிற்கும் துணையாக இருந்து வந்துள்ளது. 

இது தொடர வேண்டும் என்றால் சமூகங்களிடையிலான ஏற்றத்தாழ்வு முற்றிலும் களையப்பட வேண்டும். அதை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மடானி ஒற்றுமை அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என துணையமைச்சர் சரஸ்வதி சரஸ்வதி மேலும் கூறினார்.

ஒரு நாட்டில் நிகழக்கூடிய ஏற்றத்தாழ்வு, நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். 

இதைக் கருத்தில் கொண்டு அரசாங்கக் கொள்கைகள் வகுக்கப்படவேண்டும். அதே வேளையில் அனைத்து அரசு முயற்சிகளுக்கும் இன சாயம் பூசக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.

மலேசியாவின் பல்வேறு இன மக்களின் ஒற்றுமை மற்றும் இணக்கத்தை காக்கவும், சிரமங்களைப் பார்வையிடவும் தீர்வுகளை ஆராயவும் பாகுபாடு இல்லாத இன ஏற்றத்தாழ்வு மாநாடு கோலாலம்பூரில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. 

அதில் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தபோது துணையமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்வாண்டு 12ஆவது முறையாக நடத்தப்பட்ட இந்த மாநாட்டின் முக்கியத்துவம், அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்புகளை கொடுத்து ஒற்றுமையை வலுப்படுத்தவும் நாட்டின் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளவும் பரிந்துரைகளை வழங்கும் என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset